
உயர்சாதி இந்துக்களால் தீண்டத்தகாதவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறமுடியும் என்பதுதான் பிரச்சினை. இதைப்பற்றி ஒன்று பொதுவாக விவரித்துக் கூறலாம் அல்லது அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதைத் தனிப்பட்டவர்களின் அனுபவங்களிலிருந்தும் கூறலாம். இந்த இரு வழிகளே நமது இந்த நோக்கத்தை நிறைவேற்ற இயன்ற சிறந்த வழிகளாகும். முந்தையதைவிட பிந்தைய வழியே மேலானது எள நான் உணர்கிறேன். இந்த அனுபவங்களைத் தேர்ந்து எடுக்கையில் எனது சொந்த அனுபவங்களிலிருந்து சிலவற்றையும், மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து சிலவற்றையும் எடுத்துக்கொண்டேன். எனது சொந்த வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த அனுபவ நிகழ்ச்சிகளைக்கொண்டு இதனை நாள் தொடங்குகிறேன்.
-அம்பேத்கர்











