


தமிழ் இலக்கிய வரலாற்றில் நாடகங்களுக்கு முக்கியமான பங்கு எப்போதும் உண்டு. தமிழ் நாடகக் கலைக்குப் பங்காற்றிய கலைஞர்களைப் பற்றி இந்தப் புத்தகம் பருந்துப் பார்வையில் ஆவணப்படுத்துகிறது. அதே சமயம், மேற்கத்தியக் கலைஞர்கள் குறித்தும், அந்நாடகங்கள் நம் நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பதிவு செய்கிறது.
சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் முதல் தற்கால நவீன நாடக ஆளுமைகள் வரை நாடகக் கலையின் வளர்ச்சிக்குத் துணை நின்ற கலைஞர்களையும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது.











