இப்போதைய குழந்தைகளுக்குத் தெரியாத சமாச்சாரங்கள் எல்லாம் கதையில் வருகின்றன. தபால் பெட்டி தெரியுமா? உங்கள் பிள்ளைக்குத் தெரியுமா என்று கேட்கவில்லை. உங்களுக்கு. அது இந்தக் கதையில் பேசாப் பாத்திரமாக வருகிறது. தபால் பெட்டியில் பெரியவர்கள் லெட்டர் போடுவதைப் பார்த்து, தானும் போட வேண்டும் என்று சுகிக்கு ஆசை. ஆனால், லெட்டர் இல்லையே என்ன செய்வது? அவளேதான் எழுத வேண்டும். சரி, எழுதிவிடலாம், யாருக்கு எழுதுவது என்கிற குழப்பம் எழுகிறது. பெரிய பிரச்னைதான். யாருக்கு என்று கடைசியில் சுகியே முடிவுக்கு வருகிறாள். அது நம்மால் எதிர்பார்க்க முடியாத ஒரு நபர். நபர் என்று சொல்லலாமா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. சுகியின் உலகத்தில் சொல்லலாம். அதையும் தாண்டி, அந்த லெட்டரில் என்ன எழுதினாள் என்பது மிகப் பெரிய ரகசியம். அதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். கதையை வாசித்துக்கொண்டே போனால் போதும். ஒரு புதிய சிறு மனதை நம் முன்னால் வைக்கும் இந்தக் கதை, நாம் நடப்பில் காணும் சிறு பிள்ளைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்கள் எப்படி எல்லாம் பேசுவார்கள் என்பதை நமக்குச் சொல்கிறது. நாம் நமது இளம்பருவத்துக்குப் போக, நம் பிள்ளையின் இளம்பருவத்தைப் புரிந்துகொள்ள இந்தக் கதை நமக்கு உதவட்டும். - ரமேஷ் வைத்யா
₹120.90 ₹130.00
Customize
Publisher
Zero Degree Publication
Genre
Children's Stories | சிறுவர் கதைகள்
Published on
2026
Language
Tamil
Author
Ramya Vasudevan | ரம்யா வாசுதேவன்
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.