
குழந்தைகளுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவின் பிணைப்பை இந்தக் கற்பனையில்லா கற்பனை நிறைந்த கதை உணர்த்துகிறது. சூரியனைத் தேடிச் செல்லும் சிறுவன் வழியில் ஒரு மனிதனையும் சந்திக்கவில்லை. அவன் காலடிகள் ஒவ்வொன்றும் இயற்கையை நோக்கியே ஓசை எழுப்புகின்றன. இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என்பதைக் காட்டும்படியான கற்பனை நிலக்காட்சிகளுக்கு இந்தக் கதை வழியே சென்று வாருங்கள்.
பல ஆயிரம் குழந்தைகளை வாசிப்பிற்குள்ளும் கதைகளுக்குள்ளும் அழைத்துச் செல்லும் சிறார் கதைசொல்லிகள் வரிசை தொடர்ந்து வெளியாகிறது. இந்த முறை ஒரு புதிய கதைசொல்லி இந்தத் தொடரில் இணைந்துகொள்கிறார். அவரது முதல் கதை இது.











