


உலகம் முழுவதையும் ஓர் அறைக்குள் அடைக்க முடியுமா? முடியும்! ஒரு சிறந்த நூலகத்தின் மூலம்.
வாசிப்பே ஒரு மனிதனை முழுமையாக்குகிறது. அந்த வாசிப்பை நமக்கு வசதியாகத் தருவதற்காக அமைந்தவையே நூலகங்கள். அப்படிப்பட்ட நூலகங்களின் முக்கியத்துவம் என்ன, அவை எப்படி அமையவேண்டும். மக்கள் அதனைத் தங்களுக்கு ஏற்றவிதமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் கடமை என்ன என்று நூலகம் குறித்த பல அறிவு சார்ந்த. துறை சார்ந்த கேள்விகளை எழுப்பி, அதற்கான சரியான விளக்கங்களையும் கூறுகிறது இந்தப் புத்தகம்.
புத்தகங்களும் வாசிப்பும் உலகத்தில் எவ்விதமான மாற்றத்தை ஏற்படுத்தின. மனிதர்களுக்கு வாசிப்பு ஏன் முக்கியம், உலகின் தலைசிறந்த நூலகங்கள். தற்கால வாசிப்பின் நிலை, சிறை நூலகங்களின் அவசியம் எனப் பல தலைப்புகளில் இந்தப் புத்தகம் சிறந்த கருத்துகளை முன்வைக்கிறது.
'நூலகம்' மூலம்,ஒரு பெரும் வாசிப்பு நிலவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.











