
'மீனலோசனி' தொகுப்பில் உள்ள கதைகள் வித்தியாசமானவை.
நடைப்பயிற்சிக்காக கோடம்பாக்கம் அண்ணா பூங்காவை வலம்வரும் மக்கள்... தியாகராய நகர் பனகல் பார்க் அருகே பேரம் பேசும் தம்பதி... சான் ஃபிரான்ஸிஸ்கோ BART ரயில் கம்பார்ட்மெண்டில் முன்பின் தெரியாத அந்நியன் ஒரு பெண்ணுக்கு செய்யும் உதவி... இவை எல்லாம் எங்கோ ஒரு நாள் நான் பார்த்த சம்பவம்... என்றோ ஒரு நாள் நான் படித்த செய்தி... யாரோ ஒரு நண்பருடன் பேசும்போது அவர் கூறிய சுவையான உண்மை நிகழ்வுகள். இவைதான் இப்புத்தகத்திலுள்ள கதைகளுக்கான கரு.
இன்று நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்கள், உண்மைகள், இவற்றுடன் என் கற்பனையில் பிறந்தவை இக் கதைகள்.











