
இந்தியா மகான்களின் உலகம். ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் மக்களை நல்வழியில் அழைத்துச்செல்வதற்காக, மன நிறைவை அளித்துப் பயனுற வாழச்செய்வதற்காகப் பல்வேறு சிறந்த மகான்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களுடைய அன்பான அறிவுறுத்தல்கள் இன்றைய சிக்கல்களுக்கும் தீர்வுகளைக் கொடுத்து நம்மை வழிநடத்துபவையாக உள்ளன. இந்தப் புத்தகம் இந்தியாவின் மிக முதன்மையான பன்னிரண்டு மகான்களின் புனித வாழ்க்கையைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது, அவர்களுடைய நல்லறிவூட்டும் நன்மொழிகளையும் தொகுத்துத் தருகிறது. l சுவாமி விவேகானந்தர் l ஷீரடி சாயிபாபா l ஆதி சங்கரர் l கிருஷ்ண சைதன்யர் l குரு நானக் l வள்ளலார் l மீராபாய் l பரமஹம்ச யோகானந்தர் l அரவிந்தர் l பசவண்ணர் l கபீர் தாசர் l ஶ்ரீ நாராயண குரு











