
‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை, நிலைகளைத் தீண்டித்திறக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் கலாபூர்வமான வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன.











