
வாழ்வின் சுருக்கத்தை சொற்களில் திணிக்கும் அழுத்தம், கவிதையில் லகுவாகவும் அழகாகவும் நிகழ்கிறது. பெரிய அளவு அற்புதங்கள் நிகழாத இவ்வாழ்வில், இக்கவிதைகள் தன் அற்புத விளக்கைத் தேய்த்தபடி இருக்கின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், நீ ஏதாவது அற்புதத்தை செய்துவிடுவாய் என என் கவிதையின் உள்ளிருந்து ஒரு குரல் கேட்டபடி இருக்கும். இதை வாசிக்கும் யாரும் அந்தக் குரலை கேட்கலாம்











