
வாழ்க்கை அனுபவங்கள் இலக்கியத்தில் பகிரப்படும் போது அது மற்றவர்களுக்குப் பாடமாகிறது. பாதை ஆகிறது. அந்த விதத்தில் இந்த நூல் ஒரு அனுபவப் பகிர்வாக அமைந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். அதே சமயத்தில் முற்போக்கான சிந்தனைகளைத் தன் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார், அமுதா புண்ணியமூர்த்தி.
- பிருந்தா சாரதி
திரைப்பட இயக்குநர்











