Azhaluru Nilaththin Thanar Sorkal | அழலுறு நிலத்தின் தணற் சொற்கள்
போர் நிகழ்ந்த மண்ணில் ஒரு பூச்சியின்மீது காருண்யம் கொள்கிற கவிதைமனம் மாபெரும் நேயத்தையே அவாவி நிற்கிறது. அஜந்தகுமாரின் கவிதைகளில் வரும் குறியீடும் படிமங்களும் அனலுறு நிலத்தின் வாழ்வையும் மனிதர்களையும்தான் சுட்டுகின்றன. ஒரு நாய்கூட சுதந்திரத்தை அவாவுவதும் அடக்குமுறையை எதிர்க்கத் துணிவதுமாயிருக்கையில் அநீதியைச் சகிக்கும் மனிதர்களாகிய நாம் ஏன் இப்பிடி இருக்கிறோம்? என்ற குற்றவுணர்வைக் கவிதைகள் தூண்டுகின்றன. இப்படியாக ஒரு கவிஞனின் நூதமான பார்வையினால் வாழ்வின் அந்தரிப்புப் பெருகிவிடும் அதேவேளையில் ஆகச்சிறந்த கவிதைகளும் எழுதப்பட்டுவிடுகின்றன. வாழ்வின் ஓட்டங்களை தத்துவவியல் கண்கள் கொண்டு பார்க்கும் இவரின் கவிதைகளின் பின்னால் பிறழ்ந்துழலும் ஒருவன் அலைவதைக் காண்கிறேன்.
Non-returnable
₹111.60 ₹120.00
Customize
Publisher
Yaavarum Publishers
Genre
Poetry | கவிதைகள்
Published on
2026
Language
Tamil
Author
Tha. Ajanthakumar | த. அஜந்தகுமார்
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.