
கடல்களை ஆட்சி செய்ய விதிக்கப்பட்ட ஒரு மன்னனின் கதை.பொன்னியின் செல்லன் உலகத்தால் ஈர்க்கப்பட்ட இந்த வரலாற்றுப் புனைவு, சோழப் பேரரசின் முக்கியமான காலகட்டத்திற்குள் வாசகர்களை அழைத்துச் செல்கிறது. எதிரிகளும் சதிகளும் சூழ்ந்த நேரத்தில், இளம் அரசன் ஒருவன் தனது பேரரசின் எதிர்காலத்தை காக்க தைரியம், அறிவு மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் போராட வேண்டியுள்ளது. அதன் பின் தொடங்குவது, அரசாட்சிகளையும் கடல்களையும் கடக்கும் ஒரு மாபெரும் பயணம். அவன் தான் ஆழிகொண்டான். அவன் தான் கங்கை கொண்டான். அவன் தான் முதலாம் இராஜேந்திர சோழன்,இது வரலாற்றின் மறுவிளக்கம்.
அந்துவன் என்ற புனைப் பெயரில் எழுதும் ரவுனாக் ஷிவ், கல்கியின் படைப்புகளாலும் சோழர்களின் மரபாலும் ஈர்க்கப்பட்டு, விறுவிறுப்பான கதைநடையின் மூலம் மூலம் அந்தப் பொற்காலத்தை உயிர்ப்பிக்கிறார். பேரரசு, சாகசம், தியாகம் மற்றும் விதியை மையமாகக் கொண்ட இந்த நாவல், சோழர்களின் மகத்தான யுகத்திற்குள் வாசகர்களை அழைத்துச் செல்லும் மறக்க முடியாத பயணமாகும்.
"ஆழிகொண்டான் - கடல்களை வென்ற மாமன்னன்" சோழர் வரலாற்றை வரலாற்று உண்மைகளும் கற்பனையும் இணைத்து உயிரோட்டமாக வழங்குகிறது. 16 வயதிலேயே அந்துவன் (ரௌனாக் சிவ்) எழுதியுள்ள இந்நாவல், அவரது ஆய்வுத் திறனையும் கதைச் சொல்லும் திறனையும் வெளிப்படுத்துகிறது. இராஜேந்திர சோழனின் வரலாற்றுப் பயணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்நூல், வாசகர் களை வரலாற்றை அறிந்தும் உணர்ந்தும் அனுபவிக்கச் செய்கிறது.
போர் வெற்றிகளைத் தாண்டி, மாமன்னனின் தொலைநோக்கு பார்வை, வீரத் தன்மை மற்றும் பாரம்பரியத்தைச் சித்தரிக்கும் "ஆழிகொண்டான்", வரலாற்றுப் புனைகதையில் குறிப்பிடத்தக்க அறிமுகப் படைப்பாக திகழ்கிறது. "நான் உண்மையிலேயே வியந்து போயுள்ளேன்; பிரமிப்படைந்துள்ளேன்.
-பேராசிரியர் டாக்டர் தெய்வநாயகம்











