Swasam
0
Aasaan | ஆசான்

Aasaan | ஆசான்

இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகலே மிகவும் வறுமையான பின்னணியில் பிறந்து வளர்ந்தவர், படிப்பு ஒன்றைமட்டும் பற்றிக்கொண்டு மேலெழுந்து வந்தவர், தன்னுடைய திறமையினாலும் உழைப்பினாலும் மக்கள்மீதுள்ள அக்கறையினாலும் மாபெரும் அவைகளில் மதிப்புடன் அமர்ந்தவர், கொள்கை எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுப்பது எப்படி என்று அன்றைய இந்திய இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்து வழிநடத்திய ஆசான், மகாத்மா காந்தியை உருவாக்கிய அரசியல் குரு.

மக்களுடைய துன்பங்களை நேருக்கு நேராகப் பார்த்தறிந்த கோகலே வாழ்நாள் முழுக்க அவர்களுடைய பிரதிநிதியாகத்தான் இயங்கினார், ஒவ்வொரு நொடியும் இந்தியாவின் உயர்வைப்பற்றி மட்டுமே சிந்தித்தார், நாட்டின் உண்மையான ஊழியர்கள் எப்படிச் செயல்படவேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

இந்நூல் தமிழில் முதன்முறையாகக் கோகலேவின் வியப்பூட்டும் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது, அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்கவேண்டும் என்கிற நம் கடமையை நினைவூட்டிச் செயல்படத் தூண்டுகிறது.

₹558.00 ₹600.00
Customize
Publisher
Zero Degree Publication
Genre
Life History | வாழ்க்கை வரலாறு
Published on
2026
Language
Tamil
Author
N. Chokkan | என். சொக்கன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.