
உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தனித்துவத்தையும் உள்ளார்ந்த தத்துவத்தையும் ஒருங்கே கொண்டு திரண்டிருக்கும் இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த வைதிக வைஷ்ணவர்களின் இடப்பெயர்வுகளையும், அவர்கள் உடன் கொண்டு சென்ற கலாசாரக் கூறுகளையும், அழகுற கண்முன்னே சித்திரமாய் விரிக்கிறது. அக்காலகட்டத்திலே வாழும் வாசக அனுபவம் உறுதி, பஞ்சம் பிழைக்க வேர்களை விட்டுச் சென்று பிழைப்பு தேடும் அவலங்களையும், செய்யும் சமரசங்களையும், பெறும் உதவிகளையும், தலைமுறைகள் கடந்தும் விட்டுச்செல்லும் அதிர்வுகளையும் பிசிறின்றி நெய்துள்ளார் நாவலாசிரியர் ஆமருவி தேவநாதன்.











