
வாழ்க்கை மிக எளிதானது. ஆனால் இதனை முறையாக வாழத் தெரியாமல் பலர் சிக்கலாக்கிக் கொள்கின்றனர். முறையாக வாழ்வது எப்படி? அதற்கான சரியான வழிகாட்டியாக இந்தப் புத்தகத்தைப் படைத்துள்ளார் ஆசிரியர். கல்வி, தொழில், உறவுகள், சமூக வாழ்க்கை, நேர மேலாண்மை, நிதி நிர்வாகம், அன்பு, மன அமைதி, ஒற்றுமை என ஒரு மனிதன் முறையாக, சீராக வாழத் தேவைப்படும் அத்தனை தேவைகள் குறித்தும் இந்தப் புத்தகம் தெளிவான விளக்கத்தைக் கொடுத்து, நமக்கு முறையான பாதையைக் காட்டுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான ஓர் அத்தியாவசிய மனநலக் கையேடாகவும், சிறப்பான - வெற்றிகரமான ஆனந்தமான வாழ்க்கைக்கான ஒரு திறவுகோலாகவும் அமைகிறது இந்தப் புத்தகம்.











