U.V.Saaminathaiyarin En Sarithiram (Thernthedutha Paguthigal) | உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் (தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்)
* 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படும் புத்தகம்** ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் **
அழியும் நிலையிலிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைப் பல இடங்களில் அலைந்து திரிந்து தேடிக் கண்டுபிடித்து, அச்சிட்டுப் பதிப்பித்த உவே.சாமிநாதையரின் அரும்பெரும் பணியை விளக்குவதே 'என் சரித்திரம்' எனும் அவரது தன்வரலாற்று நூல்.
எழுநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைக் கொண்ட இந்தப் புத்தகம், எவ்வகையிலும் சுவை குன்றாமல், உவே.ரா. அவர்களின் தமிழ்த் தொண்டை அவரது எழுத்திலேயே பதிவு செய்கிறது.
சிறு வயது முதல் இறுதிக்காலம் வரை உவே.சா வாழ்வில் நடந்த முக்கியச் சம்பவங்கள், ஆரம்பக் கல்வி, தமிழ் இலக்கியத்தின் மேல் அவர் கொண்ட பற்று, பல அரிய தமிழ் சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிப்பிக்க அவர் எடுத்த கடும் முயற்சி, அதில் ஏற்பட்ட தடைகள், அதை மீறி அவர் அந்த நூல்களைப் பதிப்பித்த நிகழ்வுகள் என அனைத்தையும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துத் தருகிறது இந்தப் புத்தகம்.
இந்தக் கால இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம்'ன் சரித்திரம்' எனும் புத்தகத்தின் சாராம்சத்தை அதே சுவையோடு கைக்கு அடக்கமான பிரதியாகத் தருவதே இப்புத்தகத்தின் சிறப்பு