
சுந்தரமூர்த்தி நாயனார் போகம், யோகம் என்ற இரு நிலைகளிலும் வாழ்க்கையை நடத்தியவர்.
இறைவனால் 'தம்பிரான் தோழர்' என்று அழைக்கப்பட்டவர். இறைவனின் கட்டளைக்கு ஏற்பத் திருமணக் கோலத்துடன் எப்போதும் காட்சி அளிப்பவர். அந்தணர் குலத்தில் பிறந்து திருமுனைப்பாடி மன்னவன் நரசிங்க முனையரையரால் அரசிளங் குமரனாக வளர்க்கப்பட்டவர். தன்னலமற்ற சிவத் தொண்டின் மூலம் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர். சுந்தரரின் ஒப்பில்லா இத்தகைய வாழ்க்கையைப் பக்தி மணமும் தமிழ்ச் சுவையும் சொட்ட சொட்ட விரிவாகப் படம்பிடிக்கும் புத்தகம் இது.











