தமிழ்த் திரையுலகையும் இசையையும் பிரிக்கமுடியாது. தமிழ்த்
திரையின் ஆரம்பமே இசைக் கலைஞர்களால் உருவானதுதான்.
அத்தகைய திரை இசைச் சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப்
பதிவு செய்யும் மாபெரும் முயற்சியே இந்தப் புத்தகம்.
கர்நாடக இசை, திரை இசை என இரண்டிலும் பரிணமித்த
டி.கே.பட்டம்மாள், நடிப்பு மற்றும் இசை இரண்டிலும் பேர்பெற்ற
சுந்தரிபாய், சித்தூர் நாகையா, குறைந்த படங்களில் அரிய பாடல்கள்
தந்த ஜி.கே. வெங்கடேஷ், திரையிலும் இசையிலும் வசீகரித்த
டி.ஆர். ராஜகுமாரி, பாட்டையும் விட்டு வைக்காத ஜெயலலிதா,
பாடகர் கமலஹாசன், ஒரு தென்றலாய் நுழைந்து தமிழ்த் திரையிசை
யை மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா இசையையே தனது
இனிய இசையால் ஆட்டிப் படைத்த இளையராஜா எனத் திரை இசை
அலைகளின் மூன்றாம் பாகம் 21 உன்னத இசைக் கலைஞர்களைப்
பற்றிப் பதிவு செய்து சிறப்பிக்கிறது.
இந்தப் புத்தகம் திரை இசைக் கலைஞர்களின் பயணத்தைப் பற்றி
மட்டும் பதிவு செய்யவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் திரை
இசை சந்தித்த மாற்றங்களையும், தொழில்நுட்பத்திலும் ஒலிப்பதிவு
முறையிலும் இசை அமைப்பிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் பதிவு
செய்கிறது.