Part 1 :
தமிழ்த் திரையுலகையும் இசையையும் பிரிக்கமுடியாது. தமிழ்த் திரையின் ஆரம்பமே இசைக் கலைஞர்களால் உருவானதுதான். அத்தகைய திரை இசைச் சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் மாபெரும் முயற்சியே இந்தப் புத்தகம். 'திரை இசை அலைகள்' தொகுதியின் முதல் பாகமான இந்தப் புத்தகத்தில் தியாகராஜ பாகவதர் தொடங்கி பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள். சி.எஸ்.ஜெயராமன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி எனப் பெரும் இசை ஆளுமைகள் குறித்தும், அவர்களது சிறந்த பாடல்களைக் குறிப்பிட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் காலத்தின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களான டி.எம்.சௌந்தரராஜன், ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி என 42 திரை இசைக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் அவர்களது
பாடல்களையும், அவர்கள் பணியாற்றிய திரைப்படங்கள் குறித்த தகவல்களையும், பல முக்கியமான, அரிய செய்திகளையும் இந்தப் புத்தகம் சுவையுடன் பதிவு செய்கிறது. இசை ஆர்வலர்களுக்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம் மட்டுமல்ல. பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமும் கூட.
Pat 2:
தமிழ்த் திரையுலகையும் இசையையும் பிரிக்கமுடியாது. தமிழ்த் திரையின் ஆரம்பமே இசைக் கலைஞர்களால் உருவானதுதான். அத்தகைய திரை இசைச் சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் மாபெரும் முயற்சியே இந்தப் புத்தகம். பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சீனு, எஸ்.வரலட்சுமி, யேசுதாஸ், எஸ்.ஜானகி எனப் பல முக்கியக் கலைஞர்களின் இசைப் பயணத்தை இந்தப் பாகம் பதிவு செய்கிறது. இசை அமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பயணத்தை முதல் பாகத்தில் பகிர்ந்த ஆசிரியர் வாமனன் இந்தப் பாகத்தில் பாடகர் எம்.எஸ்.வி குறித்தும், நடிப்பில் மட்டுமல்லாது இசையிலும் பெயரெடுத்த மனோரமா குறித்தும் சொல்வது சிறப்பு.
Part 3:
தமிழ்த் திரையுலகையும் இசையையும் பிரிக்கமுடியாது. தமிழ்த் திரையின் ஆரம்பமே இசைக் கலைஞர்களால் உருவானதுதான். அத்தகைய திரை இசைச் சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் மாபெரும் முயற்சியே இந்தப் புத்தகம். கர்நாடக இசை, திரை இசை என இரண்டிலும் பரிணமித்த டி.கே.பட்டம்மாள், நடிப்பு மற்றும் இசை இரண்டிலும் பேர்பெற்ற சுந்தரிபாய், சித்தூர் நாகையா, குறைந்த படங்களில் அரிய பாடல்கள்
தந்த ஜி.கே. வெங்கடேஷ், திரையிலும் இசையிலும் வசீகரித்த டி.ஆர். ராஜகுமாரி, பாட்டையும் விட்டு வைக்காத ஜெயலலிதா, பாடகர் கமலஹாசன், ஒரு தென்றலாய் நுழைந்து தமிழ்த் திரையிசை யை மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா இசையையே தனது இனிய இசையால் ஆட்டிப் படைத்த இளையராஜா எனத் திரை இசை அலைகளின் மூன்றாம் பாகம் 21 உன்னத இசைக் கலைஞர்களைப் பற்றிப் பதிவு செய்து சிறப்பிக்கிறது. இந்தப் புத்தகம் திரை இசைக் கலைஞர்களின் பயணத்தைப் பற்றி மட்டும் பதிவு செய்யவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் திரை இசை சந்தித்த மாற்றங்களையும், தொழில்நுட்பத்திலும் ஒலிப்பதிவு முறையிலும் இசை அமைப்பிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் பதிவு செய்கிறது.
Part 4:
தமிழ்த் திரையுலகையும் இசையையும் பிரிக்கமுடியாது. தமிழ்த் திரையின் ஆரம்பமே இசைக் கலைஞர்களால் உருவானதுதான். அத்தகைய திரை இசைச் சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் மாபெரும் முயற்சியே இந்தப் புத்தகம். பேசும்பட யுகத்தில் தொடங்கி தமிழ் சினிமா இசை தொழில்நுட்பத்தில் உயர்ந்த காலம் வரையிலான தமிழ்த் திரை இசையின் இனிமையான வரலாற்றைப் பதிவுசெய்யும் தொடரின் நான்காம் பாகமான
இப்புத்தகத்தில், டி.பி.ராஜலட்சுமி, டி.ஏ.மதுரம், ஜி.என்.பி, கண்டசாலா, விஜயபாஸ்கர், சலில் சௌத்ரி, சங்கர்-கணேஷ் என இசையில் பல புதுமைகள் நிகழ்த்திய இசைக்கலைஞர்கள் குறித்துப் பதிவு செய்கிறார் வாமனன். குறிப்பாக, 1992ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி உலகப்புகழ் பெற்று ஆஸ்கார் பரிசை வென்று, இசையில் ஒரு புதிய அத்தியாயம் படைத்த ஏ.ஆர். ரஹ்மானின் அசாத்தியத் திரையிசை பயணத்தைப் பதிவு செய்வதன் மூலம் இப்புத்தகம் இவ்வரிசை சார்ந்த நூல்களில் தனி முத்திரை பதிக்கிறது.
Part 5:
தமிழ்த் திரையுலகையும் இசையையும் பிரிக்கமுடியாது. தமிழ்த் திரையின் ஆரம்பமே இசைக் கலைஞர்களால் உருவானதுதான். அத்தகைய திரை இசைச் சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் மாபெரும் முயற்சியே இந்தப் புத்தகம். நடிப்பிலும் பாட்டிலும் பேர்பெற்ற வசுந்தரா தேவி, சில பாடல்களே பாடினாலும் சிறந்த பாடல்கள் பாடிய டி.ஏ.மோதி, இசை இணையர்களான ஏ.வி.ரமணன், உமா ரமணன், இசைக் கலைவாணி வாணி ஜெயராம்,
எக்காலத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கப் போகிற தேன்குரலுக்குச் சொந்தமான எஸ்.பி.பி உள்ளிட்ட 26 இசைக் கலைஞர்களின் தேனிசைப் பயணத்தைப் பதிவு செய்கிறது 'திரை இசை அலைகள்' புத்தகத் தொடரின் ஐந்தாம் பாகமான இப்புத்தகம். திரை இசை அலைகளின் ஐந்து பாகங்களும் தமிழ்த் திரை இசை வரலாற்றை மட்டுமின்றி, ஒட்டுமொத்த திரையுலகின் விரிவான வரலாற்றையும் இணையாகச் சொல்வது சிறப்பு.