
ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், மற்றும் உயிரினங்கள் என இயற்கையின் அனைத்து அம்சங்களிலும் சாதியமும் தீண்டாமையும் எவ்வாறு ஆழமாக ஊடுருவியுள்ளது?
வானில் சுதந்திரமாகப் பறக்கும் பறவை முதல் மண்ணில் பூத்து மணக்கும் மலர் வரை, எல்லாவற்றிலும் சாதிய அடையாளம் படியும் மர்மத்தை இந்நூல் உடைக்கிறது. சுற்றுச்சூழல் தூய்மை என்ற உயரிய சிந்தனை மீது சாதியக் கறை படிந்தது எப்படி, மற்றும் இயற்கையின் அசல் நிறமான 'கறுப்பு' இழிவாக்கப்பட்டது ஏன் போன்ற பல கேள்விகளுக்கான விடைகளைச் சூழலியல் நோக்கில் தேடிப் பயணிக்கிறது. சாதியம் இயற்கையின் நியதி அல்ல என்பதைப் புரியவைத்து, இயற்கையை நேசிப்பவன் ஒருபோதும் சாதியை நேசிக்க முடியாது என்ற உண்மையை வலியுறுத்தும் ஒரு முக்கியமான ஆய்வு நூல் இது.











