


*** 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படும் புத்தகம்*** ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் ***
இளைஞர்கள் தங்களோடு எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய எழுத்துகளோடு நம்பிக்கை தரும் நாவலாக வெளியான ‘சொனாட்டா’வைத் தொடர்ந்து எழுத்தாளர் பாலுவின் அடுத்த நாவலாக வெளிவருகிறது ‘ஸ்டேல்மேட்.’ உளவியல்ரீதியாக வாழ்க்கையையும் சதுரங்கத்தையும் எதிரெதிர் கட்டங்களில் நிறுத்தி எழுத்தாளன் ஆடும் ஆட்டமே இங்கு ‘ஸ்டேல்மேட்’ எனும் நாவலாகப் பரிணமிக்கிறது. தன்னுடைய கனவை நோக்கி சுமன் மேற்கொள்ளும் பயணத்தில் சந்திக்கும் மனிதர்களையும் அனுபவங்களையும் வெகு சுவாரசியமான நாவலாக மாற்றியிருக்கிறார் பாலு. செஸ் விளையாட்டை அறிந்திராதவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
- கார்த்திகைப் பாண்டியன்











