
இந்திய சுதந்திரப் போராட்டம் இரண்டு வழிகளை முதன்மையாகக் கொண்டிருந்தது. ஒன்று, அமைதி வழியிலான அஹிம்சைப் போராட்டம். இன்னொரு, ஆயுதப் போராட்டம். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்க முடிவெடுக்க முக்கியக் காரணங்களுள் ஒன்று, இந்தியாவில் தீவிரமாகிக்கொண்டு சென்ற ஆயுதப் போராட்டமும்தான் எனலாம். ஆனால் அஹிம்சைப் போராட்டம் இங்கு பேசப்பட்ட அளவுக்கு ஆயுதப் போராட்டம் பேசப்படவில்லை. காந்திஜியின் மக்கள் செல்வாக்கும், அரசியல்ரீதியான வெற்றியும் இதற்குக் காரணம் என்றாலும், அவை மட்டுமே காரணம் அல்ல.











