
மேலாண்மை எனும் போர்க் குதிரையின் மீது சவாரி செய்வதற்குச் சில அடிப்படை விதிகள் உண்டு. அவற்றை முறையாக அறிந்துகொண்டு குதிரையைச் செலுத்தினால்தான் சேர வேண்டிய இலக்கைச் சரியான நேரத்தில் அடைய முடியும். நிர்வாக இயந்திரம் உராய்வுகள் இல்லாமல் இயங்க உதவும் அடிப்படைத் தத்துவங்கள் யாவை? இலக்குகளை அடையச் சரியாகத் திட்டமிடுவது எப்படி? ஆளுமையை வளர்த்துக்கொள்வது எப்படி? உங்களது உச்ச செயல்பாட்டு நேரத்தை உபயோகிப்பது எப்படி? பணியாளர்களை எந்த விதங்களில் ஊக்குவித்து நிறுவனத்தை முன்னேற்றுவது? பணியாளர்களை நிறுவனம் என்னும் குடும்பத்தின் அங்கத்தினர் ஆக்குவது எப்படி?











