*** 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படும் புத்தகம்*** ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் ***
போஜராஜன் இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த மன்னர்களுள் ஒருவர். மத்திய இந்தியாவில் உள்ள மாளவப் பிரதேசத்தை ஆட்சி செய்த இவர். தேர்ந்த அறிவுத்திறமை கொண்ட மன்னராகத் திகழ்ந்தார். இவரது ராணுவம் பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட, பல நவீன யுக்திகளைக் கையாண்ட படையாகத் திகழ்ந்தது.
கட்டடக் கலை, கவிதை, இசை, நாடகம், தொழில்நுட்பம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய அரசர் போஜன், போஜ்பூர் நகரத்தை நிறுவி, அங்கே அற்புதமான போஜேஷ்வர் கோயிலைக் கட்டினார். மேலும், அணைகள் பல அமைத்து நீர் மேலாண்மைத் திட்டங்களையும் மேற்கொண்டார். கட்டட க்கலை பொறியியல், இலக்கியம், இலக்கணம், கவிதை எனப் பலதரப்பட்ட கலைகள் குறித்து விரிவான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம் மன்னர் போஜராஜனின் தீரமிக்க ஆட்சியின் சாதனைகளையும் பெருமைகளையும் சுவைபட எடுத்துக் கூறி, என் அவர் சகலகலாவல்லவன் என அறியப்பட்டார் என்பதையும் விளக்குகிறது