
- *** 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படும் புத்தகம்*** ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் ***
-இளம் வயதிலேயே ‘கண் அறியாக் காற்று’ என்கிற முதல் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் ஈர்த்த சஹானாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.இதில் உள்ள கவிதைகளைக் குடும்பக் கவிதைகள் என்று சொல்லலாம். அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியோர் கவிதைகளில் வருகிறார்கள். ஆனால் இவற்றைக் குடும்பக் கவிதைகள் என்று அழைத்துப்பார்ப்பது இதனால் அல்ல. சஹானாவின் குடும்பம் சற்றே பெரிய, சமயங்களில் மிகப்பெரிய குடும்பமாக விரிகிறது. அதில் பூனையும் தெய்வமும் மழையும் மலையும் காற்றும் நிலவும் கடலும் அண்டமும் எனப் பலவும் நிரம்பி நிற்கின்றன. யாவற்றுக்குமிடையே நேயத்தின் பாடலை இசைக்க முயல்கிறார் கவிஞர்.











