விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் குறித்தும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தும் எம்.ஆர்.நாராயண் ஸ்வாமி அளவிற்கு அறிந்தவர்கள் மிகச் சிலரே. ஒரு பத்திரிகையாளராகத் தன் துறைமீது அவர் கொண்டிருக்கும் ஈடுபாடும், தகவல்களைத் துல்லியமாகச் சேகரிக்கும் தன்மையும்தான், இலங்கையில் உருவெடுத்த தமிழ் ஆயுதப் போராட்டம் குறித்த அவருடைய விரிவான ஆய்விற்குக் காரணம். பரபரப்பான எழுத்து நடையில், 2009ல் போர்க்களத்தில் மரணத்தைத் தழுவியதோடு முடிவுக்கு வந்த பிரபாகரனின் தலைமைப் பண்பு குறித்து ஒரு விரிவான ஆய்வை இந்தப் புத்தகத்தில் நாராயண் ஸ்வாமி முன்வைத்துள்ளார்.
தன்னை வெல்ல எவருமில்லை என்று நம்பிய ஒரு கெரில்லாத் தலைவரைப் பற்றி நீண்டகாலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட, அவசியமான அரசியல் கூறாய்வு இந்நூல். அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய படைப்பு.
- நிருபமா சுப்ரமணியன்
இலங்கையின் கொந்தளிப்பான வரலாற்றைப் பதிவு செய்யும் முக்கிய விமர்சகர்களில் ஒருவரான எம்.ஆர்.நாராயண் ஸ்வாமி, சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இந்த நூலை எழுதி இருக்கிறார். இந்தச் சுவாரசியமான விவரணை, பிரபாகரன் மற்றும் அவரது இயக்கத்தின் முக்கியமான தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, ஒரு காலத்தில் வீழ்த்த முடியாத சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்பாராத வீழ்ச்சியையும் வரிசைப்படுத்துகிறது. துல்லியமான ஆய்வின் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் பிரபாகரனின் இறுதித் தோல்விக்குகான காரணங்கள் குறித்த ஆழமான பார்வையை ஸ்வாமி இந்த நூலில் ஆவணபப்டுத்துகிறார்.
- ஜாஃப்னா மானிடர்
‘நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.’
- ரெடிஃப்
தன் புரிதலாலும் கண்ணோட்டத்தாலும் தனித்துவம் பெறுகின்ற நாராயண் ஸ்வாமி வரலாற்றுக்குச் செய்த மாபெரும் சேவை இது.
- டெக்கான் ஹெரால்ட்
பிரபாகரனைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய அற்புதமான புத்தகம்...
- லங்கா மந்த்லி டைஜஸ்ட்
நாராயண் ஸ்வாமி எழுதிய இந்தப் புத்தகம், அதிகார மோகத்தால் தன் வீழ்ச்சியைச் சந்தித்த ஒரு மனிதரின் வாழ்வைப் பற்றிய முற்றிலும் புதிய பார்வையைத் தருகிறது.
- ஹிந்துஸ்தான் டைம்ஸ்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள் போலவே இந்தப் புத்தகமும் விறுவிறுப்பான நடையில், நல்ல ஆய்வுடன் எழுதப்பட்டிருக்கிறது.
- சிலோன் டுடே
விரிவான ஆய்வுடன் காலத்திற்கேற்றார்போல் எழுதப்பட்டிருக்கிறது. பிரபாகரனின் அசாதரணமான வாழ்வைத் தேர்ந்த எழுத்து நடையில் வெளிக் கொணர்ந்திருக்கிறார் இருக்கிறார் ஸ்வாமி.
- எரிக் சொல்ஹைம், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முதன்மைத் தூதுவர், ‘தி ஹிந்து’ பத்திரிகையில்.
பிரபாகரனைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் தெளிவான அரசியல் ஆய்வறிக்கை. இலங்கையின் வரலாற்றைப் பயிலும் அனைத்து மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
— மெயின்ஸ்ட்ரீம் வீக்லி
மன்னர் அகஸ்டஸ் பரிந்துரைத்த 'பெஸ்டினா லெண்டே' (நிதானமாக விரைதல்) எனும் தத்துவத்தின் முக்கியத்துவத்தையும் அரசு நிர்வாகத்தை (Statecraft) பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
- தி ட்ரிப்யூன்