20ஆம் நூற்றாண்டு இலக்கியத்தின் ஆகச்சிறந்த படைப்பான ஹூலியோ கொர்த்தஸாரின் பாண்டியாட்டம் (ஹாப்ஸ்காட்ச்-1963) பாரம்பரியக் கதைசொல்லலை மீறும் முயற்சி. நேர்கோட்டில் அல்லாத முறையில் சொல்லப்படும் கதை – தொடர்ச்சியாக வாசிப்பது மூலமாக அல்லது பரிந்துரைக்கப்பட்ட வரிசையைப் பின்பற்றி அத்தியாயங்களுக்கிடையில் "பாண்டியாட்டம்" போலத் தாவுவதன் மூலமாக, வாசகர்களைப் பலவழிகளில் கதையை வழிநடத்திச்செல்ல விடுக்கப்படுகிற அழைப்பு.
இந்த நாவல் பாரிஸின் பொஹீமியன் தெருக்களுக்கும் பியூனஸ் அயர்ஸின் குழப்பமான யதார்த்தத்திற்குமிடையில் அலைந்து திரியும் அறிவுஜீவியான ஹொராசியோ ஒலிவேராவைப் பின்தொடர்கிறது. அர்த்தத்திற்கான அவனது தேடல் துண்டு துண்டாக, கிட்டத்தட்ட ஜாஸ் இசையின் தாளத்தைப்போன்று வெளிப்படுகிறது. அதிலுள்ள காதல், தத்துவம் மற்றும் இருத்தலியல் ஏக்கம் புனைகதைக்கும் வாழ்க்கைக்குமிடையிலான எல்லைகளை மங்கச் செய்துவிடும்.
வாசிப்பின் சாரத்திற்குச் சவால் விடும் நாவலான பாண்டியாட்டம் கலகத்தை உருவாக்கும் ஒரு படைப்பு. இந்தப்பிரதி எழுத்தாளர்களை ஊக்குவித்து, தன் எல்லையற்ற சாத்தியக்கூறுகளால் வாசகர்களையும் வியப்பிலாழ்த்தும்.
Non-returnable
Rs.764.00 Rs.899.00
Details
Translator
Translator
Sridhar Rangaraj | ஸ்ரீதர் ரங்கராஜ்
Publisher
Ethir Veliyeedu
Genre
Classics | க்ளாசிக்ஸ்
Published on
2026
Language
Tamil
Author
Julio Cortázar | ஹூலியோ கொர்த்தஸார்
Share :
Specifications
Offer
Offer Percentage (%)
:
20%
Price
Price Range
:
800 - 900
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.