
*** 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படும் புத்தகம்*** ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் ***
தொ. பத்தினாதன் ‘போரின் மறுபக்கம்’ தன்வரலாற்று நூலுக்காகவும் அகதிகள் பற்றிய தொடர் கட்டுரைகளுக்காகவும் பரவலாக அறியப்பட்டவர். இது அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.இவருடைய கதை உலகம் பதற்றமும் வேதனையும் கூடியது. அன்றாடத்தின் சுமைகளைத் தன்னுள் கொண்டு இயங்குவது. தமிழ்நாட்டில் உதிரித் தொழிலாளிகளாகத் திரியும் இலங்கைத் தமிழர்கள், இந்தியாவிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்கள் ஆகியோரின் அன்றாடத்தின் தவிப்புகளை, நிராசைகளைப் பதிவு செய்திருக்கிறார்.இலங்கைத் தமிழ் அகதி முகாம்களின் வெளியே தெரியாத மற்றொரு முகத்தை இக்கதைகளில் காணலாம்.











