
முதலாம் உலகப் போர் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அத்தனையும் அழிவுகள். முக்கியமாக ஜரோப்பாவை சிதறவைத்த போர். இத்தனைக்கும் அடிப்படை ஒரு இளவரசரின் தேனிலவுப் பயணம் என்றால் நம்ப முடிகிறதா?
ஒவ்வொரு நாடும் இந்தப் போரில் ஈடுபட்டதற்குக் காரணம் தனித்துவமானது. விந்தையானது என்றும் கூறலாம்.
அருகருகே வரிசையாக நிற்க வைக்கப்பட்ட சீட்டுகளில் ஒன்றை தட்டி விட்டால் எப்படி அடுத்தடுத்து அனைத்து சீட்டுகளும் சரிந்து விழுகிறதோ அப்படித்தான் பல நாடுகளும் முதலாம் உலகப் போரினால ஈடு செய்ய முடியாத இழப்புகளை சந்தித்தன.











