Swasam
0
maankuttigalum-parunthugalum
maankuttigalum-parunthugalum
maankuttigalum-parunthugalum

"Maankuttigalum Parunthugalum | மான்குட்டிகளும் பருந்துகளும்

மண்ணும் எல்லைகளும் மாறினாலும் பெண்களின் அனுபவங்கள் ஒன்றுக்கொன்று அந்நியமல்ல. இந்தத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இருபத்தொன்று சிறுகதைகள், இருபத்தொன்று தனித்த உலகங்களின் கதவுகளைத் திறக்கின்றன. மும்பை முதல் கன்னியாகுமரிவரை; ஜெர்மனி முதல் கனடாவரை புவியியல் தூரங்கள் நீளமானவை. ஆனால்
உள்ளத்தின் தூரம் மிக அருகில் உள்ளது. பெண்கள் பார்வையில் 'வீடு' என்பது சுவர்கள் மட்டுமல்ல. 'காயம்' என்பது உடலில் பதியும் வலி மட்டும் அல்ல. 'மண்' என்பது நிலம் மட்டுமல்ல, அது அடையாளம். 'மனிதம்' என்பது ஒரு சொல் அல்ல, வாழ்வியல் போராட்டம். இந்தக் கதைகள் கேள்வி கேட்கின்றன. சில நேரங்களில் அமைதியாக; சில நேரங்களில் எரிந்த மண்ணின் வாசத்தோடு; சில சமயம் எளிய மனிதனின் அன்றாட வாழ்வு வழியாக; சில சமயம் ஆசிரியையின் உறுதியான குரலில்; சில வேளைகளில் அதிகாரத்தின் முகமூடியை உரிக்கும்
வலிமையுடன்! இவை வெறும் கற்பனைகள் அல்ல, வாழ்க்கையைத் தொட்ட உண்மைகள். பெண்கள் தங்கள் அனுபவங்களை மறைக்காமல், மென்மையையும் வலிமையையும் இணைத்துச் சொல்லும் நேர்மையான முயற்சிகளே இந்தக் கதைகள். ஒவ்வோர் எழுத்தாளரும் தாங்கள் அனுபவித்து வளர்ந்த வாழ்க்கையையும், தங்கள் சமூகத்தின் குரலையும், தங்கள்
உள்ளத்தின் சாட்சியையும் இந்த நூலில் பதித்துள்ளனர். பெண்மையின் ஆழத்திலுள்ள சிந்தனைகள் வேறுபட்டு இருந்தாலும், அவற்றை இணைக்கும் நூல் இது. இந்தத் தொகுப்பு ஒரே குரல் அல்ல. பல குரல்களின் தொகுப்பு. ஆனால் ஒலிக்கும் உண்மை ஒன்று. பெண்கள் தங்கள் மௌனமான ஆழ்மனச் சிந்தனையுடன் வரலாறு படைக்கத் துணிந்துள்ளனர். எங்கள் எழுத்துப் பயணத்தை வலுப்படுத்தி, ஊக்கமளித்து வழிநடத்தி வருகின்ற எழுத்தாளர் அம்பை அவர்கள்
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார். அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி, உள்ளம் நிறைந்த வாழ்த்துகள். பெண்கள் குழுவின் எழுத்துச் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்நூலை அன்போடு பதிப்பித்து வழங்கும் பதிப்பாளர் சுவாசம் ஹரன் பிரசன்னா அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றி. இத்தொகுப்பில் தங்கள் கதைகளை வழங்கி ஒரு புத்தகமாக்க
ஒன்றிணைந்த அனைத்து தோழிகளுக்கும் அன்பும் பாராட்டும். இந்நூலை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எழுத்தாளர்களாக நாம் எழுத்தின்
மூலம் இதமுடனும், அறநெறியுடனும், ஒருமைப்பாட்டுடனும் ஒருங்கிணைய உதவுவதே இந்நூலின் பங்களிப்பும் நோக்கமும் ஆகும்.

நூல் தொகுப்பாளர்,
ஜெ.பி. ஜோஸபின் பாபா
Rs.160.00 Rs.200.00
Details
Publisher
Swasam Publications
Genre
Short Stories | சிறுகதைகள்
Number of Pages
Page Count
184
Published on
2026
Language
Tamil
Author
J.P Josephine Baba | ஜெ.பி. ஜோஸபின் பாபா
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.