


உலகச் செவ்வியல் நாவல்களில் முக்கியமான நாவல் ‘குற்றமும் தண்டனையும்’. உலகம் முழுக்க இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் இந்த நாவலை வாசித்துவிட்டு அந்தத் தூண்டுதலில் எழுத வந்தவர்கள் அதிகம். இன்றளவும் இந்த நாவல் வாசகர்களால் கொண்டாடப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது.
ஆறு பாகங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் விரியும் இந்த நாவலை, அதன் அழகு குறையாமல் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். இவரது பொன்னியின் செல்வன் சுருக்கம், பார்த்திபன் கனவு சுருக்கம், சிவகாமியின் சபதம் சுருக்கம் மற்றும் போரும் அமைதியும் சுருக்கம் ஆகியவற்றின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்தச் சுருக்கப்பட்ட நூலும் வெளியாகிறது.











