Swasam
0
Kuralum Pathilum | குரலும் பதிலும்

Kuralum Pathilum | குரலும் பதிலும்

நவீனத் தமிழ்ப் புனைகதைப் பெருக்கத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண் எழுத்தாளர்களும் தம் பங்கைச் செலுத்திவந்துள்ளனர். இந்த வகை முன்னோடிப் பெண் எழுத்தாளர்களில் கு.ப.ராஜகோபாலனின் சகோதரியான கு.ப. சேது அம்மாள் (1908-2002) ஒருவர். இவர் மணிக்கொடி கால பெண் எழுத்தாளராகத் தொடக்கம் பெற்று, இருபதுக்கு மேற்பட்ட நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். கு.ப.ரா.வின் உச்சத்தை இவர் அடையவில்லை என்றாலும் இவரது நாவல்கள், இடைத்தரமான பத்திரிகைக் கதைப்போக்கையும் பெண்களின் சித்தரிப்பையும் குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்டவையே. வேங்கடலட்சுமி, குகப்ரியை, ஜெயலட்சுமி ஸ்ரீநிவாசன், கமலா பத்மநாபன், எம்.எஸ்.கமலா, கமலா விருத்தாசலம், சரோஜா ராமமூர்த்தி போன்ற பெண் எழுத்தாளர்களை சேது அம்மாளின் சமகாலத்தவராகவும் அவர்களுள் கலைத்தரத்தில் இவரையே முதன்மையானவராகவும் கருதலாம்.

கு.ப. சேது அம்மாளின் நாவல்களின் பிரதிநிதித்துவம் கொண்ட படைப்பாக இந்த குரலும் பதிலும் (1957) நாவலைக் கூறலாம். இதைத் தொடர்ந்து இவ்வரிசையில் சேது அம்மாளின் உயிரின் அழைப்பு (1966) என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப் பெற்றுள்ளது.

Non-returnable
₹170.00
Customize
Publisher
Parisal Puthaga Nilayam
Genre
Novels | நாவல்கள்
Published on
2025
Language
Tamil
Author
Kaala Subramaniam | கால சுப்ரமணியம்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.