
காசிதமிழ்க்குமரன் பகட்டும் அமலையும் இன்றி ஆழமாக எழுதும் அரிய படைப்பாளிகளில் ஒருவர் சக மாந்தரின் துயரங்களை போராட்டங்களை அலைபாய்தல்களை, முரண்களை தன்னலமற்ற மகிழ்ச்சியை பக்குவமான மொழி மூலம் படைப்பாக்குபவர்.
நான் வாசித்த அவரது சிறப்பான சிறுகதைத் தொகுப்புகள் மாயத்திரை ஊமைத்துயரம், பொலையாட்டு மந்தைப்பிஞ்சை என்பன இந்தப் புதிய தொகுப்பின் தலைப்பு கொக்கரவல்லி,
அவரது சொல்லாட்சி மலைக்க வைப்பது. எடுத்துக்காட்டுக்கு பொலையாட்டு இச்சொல் புலையாட்டு எனும் சொல் திரிபு புலை எனும் சொல்லின் பொருள் இழிவு புலையாடுதல் எனில் இழிவாக நடத்தல், புலையாட்டம் என்றாலும் புலையாட்டு என்றாலும் அதுவே பொருள்.
அவரெழுதிய நாவலின் தலைப்பு ஒறுப்பு. திருவள்ளுவர் கையாண்டசொல் இது ஒறுப்பு என்றால் தண்டனை கடிதல் வெறுப்பு அடக்குதல் முதலானவை காசி தமிழ்க்குமரனின் எழுத்தாளுமைக்கும் மொழி நேர்த்திக்கும் இத்தலைப்புகளே சான்று.
-நாஞ்சில் நாடன்











