
உள்ளத்தில் தோன்றிய ஒப்பிலா அறக்கருத்தை உள்ளதை உள்ளபடியே உணர்த்த முனைந்தேன் கவிவாணியின் கொன்றைவேய்ந்தோன் கருத்தினையே கதையாய் வடித்தேன் நூலாய்ப் படைத்தேன் சிறுவர் இளையோர் சேர்ந்தே படித்திட வாழ்வியல் கூறும் நன்னெறி கதைகள் கொடுத்து பழகுவோம் கொடையாய்க் கொடுத்தேன் குழந்தை இலக்கியம் படித்தே மகிழ்வோம்.
-பொன் முருகன்











