
இவ்வுலகத்திலுள்ள அத்தனைப் பொருளாதாரச் சித்தாந்தங்களும் வட்டியை அடிப்படையாகக் கொண்டவை. ஏழைகளிடமிருந்து பணத்தைச் சுரண்டி வசதிபடைத்தவர்களை மென்மேலும் பணக்காரர்களாக்குவதுதான் வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரம்.
ஆனால், இறைவன் வகுத்தளித்த பொருளாதாரம் இந்தச் சுரண்டலை அடியோடு ஒழித்து, நீதி, நியாயம் மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டது. செல்வம் ஒரு குறிப்பிட்ட சாரரிடம் மட்டும் முடங்கிவிடாமல் எல்லோரிடமும் சுழன்று வருவதற்கான அடித்தளம் இட்டது. இந்நூல் இஸ்லாமியப் பொருளாதார அமைப்பை முழுமையாக, அதே நேரத்தில் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.











