


• முகலாய மன்னர்கள் அனைவரும் மாபெரும் நாயகர்களாகவும் புனிதர்களாகவும் சித்திரிக்கப்படும்போது, பாரத நாட்டுத் தத்துவங்களும் விழுமியங்களும், குறிப்பாக, சனாதன தர்மத்தின் மேன்மைகள் திரிக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்படுவது ஏன்?
• உண்மைகளை மூடி மறைத்து, கோவில்களைத் தகர்த்தெறிந்த அந்நிய நாட்டுக்காரர்களை மதநல்லிணக்கத்தின் தூதுவர்களாகப் போற்றுவது எதன் அடிப்படையில்?
• பாரத இந்து மன்னர்களின் அறச் செயல்பாடுகள் புறக்கணிக்கப்படுவது ஏன்?
இந்தப் புத்தகம் உங்களுடன் நேர்மையாக வரலாற்று ஆதாரங்களுடன் பேசுகிறது. காலங்காலமாகப் புகட்டப்பட்ட தவறான மொழிபெயர்ப்புகள், மிகைப்படுத்தப்பட்ட புகழுரைகள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகளைத் துணிச்சலுடன் உடைத்தெறிகிறது.











