Swasam
0

Hope The Autobiography | நம்பிக்கை சுயசரிதை

உயிர்த்துடிப்புடன் எழுதப்பட்டுள்ள இந்த சுயசரிதையில், போப் பிரான்சிஸ், தன்னுடைய அசாதாரணமான வாழ்க்கைக் கதையையும், தன்னுடைய அனுபவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களையும் நம்முடன் ஒளிவுமறைவின்றிப் பகிர்ந்து கொள்கிறார். கிறித்தவத் திருச்சபையின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு போப் எழுதியுள்ள ஒரு சுயசரிதை இது. போப் பிரான்சிஸின் இத்தாலியப் பூர்விகத்திலிருந்து தொடங்குகின்ற இந்நூல், அர்ஜென்டினாவில் அவருடைய குழந்தைப்பருவத்துக் கதையைத் தொட்டு, அவருக்குக் கிடைத்த ஆன்மிக அழைப்பைப் பற்றிப் பேசி, அவர் படிப்படியாக உயர்ந்து ஒரு போப்பாக ஆகி தன் இறுதி மூச்சுவரை உலக மக்களுக்குச் சேவையாற்றிக் கொண்டிருந்ததுவரை ஆழமாக விவரிக்கிறது. இதில் தன் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கின்ற போப் பிரான்சிஸ், ஒரு போப்பாகத் தன்னுடைய பணியின் ஊடாகத் தான் எதிர்கொண்ட முக்கியமான கணங்களைப் பற்றித் துணிச்சலாகப் பேசுகிறார். மேலும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இக்கட்டத்தின் முக்கியப் பிரச்சனைகளான போர் மற்றும் அமைதி (உக்ரைன் மற்றும் மத்திய கிழக்குப் போர்கள் உட்பட), புலம் பெயர்தல், சுற்றுச்சூழல் நெருக்கடி, பெண்களின் நிலை, பாலியல்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, கிறித்தவத் தேவாலயத்தின் வருங்காலம், மதங்கள், இனி வரும் காலங்களில் மனிதகுலம் எதிர்கொள்ளவிருக்கின்ற சவால்கள் என்பன போன்றவற்றைப் பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் அவர் தவறவில்லை. போப் பிரான்சிஸ் தன் பெயர் சொல்லும்படி விட்டுச் செல்கின்ற இந்தச் சீதனம், வருங்காலத் தலைமுறையினருக்கு அவர் வழங்கியுள்ள நம்பிக்கைக் கொடையாகும். படிப்போரின் இதயங்களை நெகிழச் செய்கின்ற விதத்திலும் நகைச்சுவை இழையோடவும் எழுதப்பட்டுள்ள இந்நூல், உலகெங்குமுள்ள வாசகர்களுக்கான அவருடைய தார்மிக மற்றும் ஆன்மிகப் பிரகடனமாகவும் திகழ்கிறது.
Non-returnable
Rs.599.00
Details
Author1
Pope Francis | போப் பிரான்சிஸ்
Publisher
Manjul Publishing House
Genre
Biography | சுயசரிதை
Number of Pages
390
Published On
2025
Language
Tamil
Product Details
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.