
இந்நூலின் ஆசிரியரான முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் 1948 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்து குடவாசலில் பிறந்தவர். விலங்கியல் துறையில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் வரலாற்றுத்துறையில் எம்.ஏ. எம்ஃபில் பட்டங்களையும் கோயிற் கட்டடக் கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர். 2016 ஆம் ஆண்டில் சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் முதுமுனைவர் பட்டமும் பெற்றவர்.
சிறந்த நூல் படைப்புகளுக்கான அரசின் பரிசுகளை மூன்று முறை பெற்றவர். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் ஆனந்தக்குமாரசாமி கவின் கலை விருதினை இவருக்கு அனித்து கௌரவப்படுத்தியுள்ளது. தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான உவே.சாமிநாதய்யர் தமிழறிஞர் ளிகுதினை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். இதுவரை 50 நூல்களையும் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் படைத்தவர்.











