Gandhi Adichuvadum Adhikara Chuvadum | காந்தி அடிச்சுவடும் அதிகாரச் சுவடும்
நமது நாட்டின் வரலாற்றை மறு பார்வை கொண்டு, மீண்டும் கேள்விக்குட்படுத்திப் புதிய புரிதலுக்கு உள்ளாக்க வேண்டிய காலகட்டம் இது. காந்தியைப் பற்றிச் சொல்லப்படும் புகழுரைகள் எல்லாம் ஒரே சீராக இல்லை. அவரது கொள்கைகளுக்கும் கனவுகளுக்கும் முரண்பாடுகள் இருந்தன. இவை குறித்த விமர்சனங்களும் கேள்விகளும் புறக்கணிக்கப்படுகின்றன. கேள்வி எழுப்புபவர்கள் முத்திரை குத்தப்படுகிறார்கள். அமைதியாக்கப்படுகிறார்கள். காந்தி மீதான விமர்சனங்களை வைப்பது, காந்தியை மறுப்பதாகாது.
இந்தப் புத்தகம் காந்தியின் அரசியல் வாழ்க்கையை நேர்மையாக ஆராய்கிறது. வெற்றுப் புகழ்ச்சிகள் இல்லை, வெற்றுப் பழிசுமத்தல்களும் இல்லை. வரலாற்றை அலைக்கழிக்கும் கேள்விகள் மட்டுமே இருக்கின்றன.
வரலாற்றுத் தலைவர்களின் கடினமான முடிவுகளையும் அதன் விளைவுகளையும் பற்றி ஆழமாகச் சிந்திக்க விரும்புகிறவர்களுக்கான நூல் இது.
காந்தியின் மீதான விமர்சனம் கலந்த கேள்விகள் என்ற பெயரில் இந்தப் புத்தகம் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் எட்டிப் பார்க்காமல், அவரது அரசியல் சார்ந்து மட்டும், அதுவும் ஆழமான ஆதாரங்களுடன் பேசி இருப்பது இந்த நூலின் சிறப்பு.
Rs.340.00 Rs.400.00
Details
Author1
Vidhoosh | விதூஷ்
Publisher
Swasam Publications
Genre
History | வரலாறு
Number of Pages
326
Published On
2025
Language
English
Share :
Product Details
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.