


ஆங்கிலம் கற்பதை எளிமையாகச் சொல்லித் தரும் புத்தகம், ஆங்கிலத்தில் எங்கே தவறு விடுகிறோம், அதை எப்படிச் சரி செய்வது என்பதை விளக்கி இருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும், ஆனால் பேசும்போதும் எழுதும்போதும் தடுமாறுகிறேன்"" என்று நினைப்பவர்களுக்கான கையேடு இந்தப் புத்தகம். இலக்கணத்தோடு நின்றுவிடாமல், அதன் பயன்பாட்டையும் சொல்லி, கிட்டத்தட்ட ஓர் அகராதிக்கு இணையாக, உச்சரிப்பு முதற்கொண்டு சொல்லித் தருகிறது இந்த நூல். பயிற்சிகளும் தரப்பட்டிருக்கின்றன. நாம் ஆங்கிலத்தில் எழுதவோ பேசவோ தயங்கும்போது, உடன் இருந்து உதவும் நண்பனாக விளங்குகிறது இந்த எளிய புத்தகம்.











