Swasam
0
En Suya Sarithai | என் சுய சரிதை
En Suya Sarithai | என் சுய சரிதை
En Suya Sarithai | என் சுய சரிதை

En Suya Sarithai | என் சுய சரிதை

Edited by C.S. Lakshmi | சி. எஸ். லக்ஷ்மி

சகோதரி R.S. சுபலக்ஷ்மி அம்மாள் (1886-1969) குடும்பமும் சமூகமும் புறக்கணித்த பல இளம் விதவைகளுக்குக் கல்வி புகட்டியவர்; சமூகச் சீர்திருத்தவாதி. மரபு வழுவாத குடும்பத்தில் 1886-இல் பிறந்து சிறுமியாக இருக்கும்போதே விதவையானார். அவர் குடும்பம் வைதிக மரபுகளை எதிர்த்து அவரைப் படிக்க வைத்தது. எல்லாச் சமூக இடர்களையும் எதிர்கொண்டு, தன் குடும்பம் பக்கபலமாக இருக்க, கல்வி கற்றதோடு நிற்காமல், ஆசிரியராகவும் இருந்து, பெண்களுக்கான விதவாச்ரமம் அமைத்து, சமூக சேவை செய்ய அங்கு ஆசிரியர்களையும் டாக்டர்களையும் அரசு ஊழியர்களையும் உருவாக்கினார் சகோதரி சுபலக்ஷ்மி. அதோடு நிற்காமல் சாரதா வித்யாலயம், வித்யா மந்திர் போன்ற பல பள்ளிகளையும் நிறுவினார். அடிமட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் பள்ளிகளை நிறுவினார். அகில இந்திய மகளிர் மாநாடு, இந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்ட, 1952-1956 ஆண்டுகளில் மதராஸ் மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த, 1920-இல் கைசர்-இ-ஹிந்த் பதக்கமும் 1958-இல் பத்ம ஸ்ரீ விருதும் பெற்ற அபூர்வமான ஒரு மனுஷி, பலரின் வாழ்க்கைச் சரிதங்களை இணைச் சரிதங்களாகக் கொண்டு கூறும் வாழ்க்கைச் சரிதம் இது.

இந்தக் கதைகளையும் சகோதரியின் வாழ்க்கை அனுபவங்களையும் படிக்கும்போது ஒரு மாபெரும் காப்பிய நாடகம் கண்முன் நடப்பதுபோன்ற உணர்வைத் தடுக்க முடியாது. பாலிய வயதில் விதவையாகி, பெண்கள் கௌரவத்துடன் வாழும் சமூகமாகத் தன் சமூகத்தையும் சமுதாயத்தையும் சீர்திருத்தும் முயற்சிகளை மேற்கொண்ட அரிய பெண்மணி ஒருவரின் சுயசரிதமாகக் குறுகி விடாமல் பெண்களின் சமூக வரலாறாக விரியும் நூல் இது. கடந்தவற்றைத் திரும்பிப் பார்க்க உதவும் ஒரு வரைபடமாக இருப்பதுடன் பின்னோக்கிப் பார்க்காமல் முன்னோக்கிப் போக முடியாது என்பதால், இன்றைய தறுவாயிலும் இந்தச் சுயசரிதை பொருந்திப்போகிறது.
Rs.360.00 Rs.400.00
Details
Author1
Sister R S Subhalakshmi Ammal | சகோதரி R.S. சுபலக்ஷ்மி அம்மாள்
Publisher
Swasam Publications
Genre
Autobiography | சுயசரிதைகள்
Number of Pages
400
Published On
2025
Language
Tamil
Specifications
Price
  • Price Range
    :
    300 - 500
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.