Dvaitha Gnana Guru Sri Madhvachariyar | த்வைத ஞானகுரு ஸ்ரீ மத்வாச்சாரியர்
*** 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படும் புத்தகம்*** ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் ***
இந்தியத் தத்துவ ஞானிகளில் முக்கியமானவர் ஸ்ரீ மத்வாச்சாரியர் அத்வைதமும் விஷிஸ்டாத்வைதமும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அவற்றிலிருந்து மாறுபட்ட தவைதம் என்ற ஒரு தத்துவப் பாதையை உலகுக்கு அளித்தவர். பாரதமெங்கும் த்வைதத் தத்துவத்தை நிலை நிறுத்தியவர், தனக்குப் பின்னும் த்வைதம் தழைத்தோங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர். இன்றுவரை த்வைதம் பலராலும் பின்பற்றப்படும் ஒரு தத்துவமாகவும் சமயமாகவும் இருப்பதற்கு மத்வாச்சரியரின் ஞான ஒளியே காரணம். கப்பலில் கோபி சந்தனக் கல்லில் கிடைத்த கிருஷ்ண விக்கிரகத்தை உடுப்பி கோவிலில் ஸ்ரீ மத்வர் பிரதிஷ்டை செய்தது தொடங்கி, அஷ்ட மடங்கள் ஸ்தாபித்தது. தனது சீடர்கள் மூலம் த்வைத ஒளியைப் பரப்பி மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்தது என விரிந்து, அவரது இறுதி நாளின் 'மலர்மாலை அவதாரம்' வரை அனைத்தும் இந்த நூலில் சுவித்துவமாகவும் ஆழமாகவும் எளிமையாகவும் விவரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ மத்வரின் வாழ்க்கை வரலாற்றோடு, த்வைதத்தின் தத்துவப் பரவல், அதன் உள்ளொளி, த்வைத முக்கியத் தீர்த்தர்களான ஸ்ரீ ஜய தீர்த்தர், ஸ்ரீ வியாஸராஜர், ஸ்ரீ வாதிராஜர், ஸ்ரீ ராகவேந்திரர், தாசர்களான புரந்தரதாசர், கனகதாசர் பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் கூடுதலாகத் தருவது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. த்வைதம் குறித்தும் ஸ்ரீ மத்வாச்சாரியர் குறித்தும் நூல்கள் தமிழில் குறைவு என்னும் நிலையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.