
அப்சல் இதுவரை எழுதிய 20 புத்தகங்களில், பெரும்பாலானதை படித்து பிரமித்து இருக்கிறேன். எல்லாமே சுவாரஸ்யமாக எழுதப் பட்ட புத்தகங்கள். இந்த 'தஸ்விதாநியா' படித்து முடித்ததும், அதே பிரமிப்பு. இலக்கியமும், சினிமாவும் அப்சலுக்கு இரண்டு கண்கள். 'தஸ்விதாநியா' போல ஒரு புத்தகத்தை எழுத, தேர்ந்தெடுத்த விஷயத்தில் இவருக்கு இருக்கும் ஈடுபாடு, அதற்காக தீவிரமான உழைப்பு, அபார ஞாபக சக்தி, எடுத்துக்கொண்ட ஸப்ஜெக்டில் அவரின் திறமையும் வியக்க வைக்கிறது. ஒவ்வொரு படத்தை பற்றியும், அவை ரிலீஸான தேதி, நடிகர் நடிகைகளின் விபரம், தொழில்நுட்ப கலைஞர்கள், பாடல்கள், வசனங்கள், அவற்றில் சிறப்பானதை தேர்ந்தெடுத்து, அதன் மொழியாக்கம். இது வரைக்கும் இப்படி ஒரு சினிமா புத்தகத்தை, நான் படித்ததில்லை. ஜனரஞ்சக புத்தகம் என்று கிண்டலடிக்கப்பட்ட 'அலிஃப் லைலா' இன்று பேரிலக்கியமாக கொண்டாடப்படுவதை போல, 'தஸ்விதாநியா'விற்கும் நடக்கும்.
இந்தப் புத்தகம், அப்சலின் மகாபாரதம்.
- ஸப்தரிஷி லா சரா











