1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது.இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏற்க்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது! இதன் விளைவாக இந்த நகரம் கதிர் வீச்சு கொண்ட அயோடின், சீநீயம், ஸ்ட்ரோனாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தை பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணு உலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது. இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும், உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச். இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.
Non-returnable
Rs.300.00 Rs.300.00
Details
Author1
Svetlana Alexievich | ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
Publisher
Ethir Veliyeedu
Genre
Science | அறிவியல்
Number of Pages
361
Published On
2016
Language
Tamil
Share :
Product Details
Chernobilin Kuralkal | செர்னோபிலின் குரல்கள்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.