பகவான் புத்தர் அருளிய 'தம்மபதம்' 26 அத்தியாயங்களும் 423
சூத்திரங்களும் கொண்டது. சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம்
என்னும் திரிபிடகங்கள்- புத்தர் அருளிய அறவுரைகளின் தொகுப்புகள்.
அதில் சுத்தபிடகத்தின் ஐந்து பகுதிகளில் ஒன்றான குத்தக நிகாயம்
பகுதியில் வருவதே தம்மபதம்.
பௌத்த மதத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவும், பகவான்
புத்தரின் போதனைகளை விரிவாகத் தெரிந்துகொள்ளவும் உதவும் நூல்
இது.
ஐம்புலன்களின் அடக்கம், ஒழுக்கத்தின் மேன்மை, நன்னடத்தை எனப்
பல நன்னெறிகளை உரைக்கும் நூலை, எளிய தமிழில் விளக்கமாகப்
பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.
காலம் கடந்து நிற்கும் இந்த நூல் புத்த பிக்குகளுக்குத் தர்மத்தின்
பாதையை உரைக்கும் நூலாக மட்டுமின்றி, அனைத்து மக்களுக்குமான
அறவுரைகளைச் சொல்லும் நூலாகவும் திகழ்கிறது.