


*** 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படும் புத்தகம்*** ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் ***
நாயன்மார்களில் சிறப்பு வாய்ந்தவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட அனைத்து 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றையும் பக்தி நெறிகளையும் பேசுகிறது இந்தப் புத்தகம்.பொயு 6 -10ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த, சைவ சமயத்தின் தூண்களாகக் கருதப்படும் இந்தப் பெருமக்கள், தங்கள் சிவ பக்தியை இலக்கியங்கள் மூலமாகவு ஐம், சிவனடியார்களுக்குச் செய்த சேவை மூலமாகவும் தழைக்கச் செய்தனர். இவர்களில் அரசர்கள், வணிகர்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் ஆகியோரும் அடக்கம்.நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியிலிருந்து நாயன்மார்களின் புகழ்பாடும் சுவைமிகு பாடல்களும் அவற்றுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு











