பொன்னிவனத்துப் பூங்குயிலி
பொன்னிவனத்துப் பூங்குயிலி
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! உங்களுக்கு என் பணிவான வணக்கம். இது ஒரு வரலாற்று நாவல், ஆனால் இது நீண்ட நெடிய நாவல் அல்ல ஒரு குறுநாவலே. இது நடந்த வரலாறுதான். ஆனாலும் இடை இடையே சில கதை மாந்தர்களும் சிற்சில சம்பவங்களும் அதனாலேதான் இது ஒரு குறுநாவல். இந்த வரலாறு இணைக்கப்பட்டிருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் நடந்ததாகும்.இந்தியத் திருநாட்டில் ஐரோப்பியர்கள் வாணிபம் செய்யும் நோக்கத்துடன் புகுந்த காலத்தில் நடந்தேறிய வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்ட நாவல். பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டில் இந்தியா, அதுவும் குறிப்பாகத் தமிழ்நாடு எப்படி இருந்தது என்பதைக் கூறும் நாவல். இந்த நாவலில் கதை நடந்த இடங்களும் கோயில்களும் எப்படி இருந்தன என்பதும் கூறப்பட்டிருக்கிறது.இவ்வினிய வரலாற்றின் இறுதியில் இக்குறுநாவலின் ஆசிரியனாகிய நானும் வந்து போகிறேன். இக்குறு நாவல் என்னுடைய கன்னி முயற்சி ஆகும். உங்கள் அன்பான ஆதரவையும், ஆசியையும் பெய்து என்னை ஊக்குவியுங்கள்.
இக்குறுநாவலைத் தமிழகத்தில் வளர்ந்து வரும் சுவாசம் பதிப்பகத்தார் மனமுவந்து அச்சு வாகனம் ஏற்றி தமிழ் மண்ணில் உலாவவிட ஒப்புக்கொண்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சுவாசம் பதிப்பகத்தின் என்னுடைய இனிய நண்பர் ஹரன் பிரசன்னா அவர்கள் இந்த நூலை வெளிக்கொணரப் பெரிதும் உற்சாகத்துடன் நேசக்கரம் நீட்டியதை இங்கே நினைவு கூர்ந்து அவர்களின் ஒத்துழைப்புக்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன் என்பதை உறுதி கூறுகிறேன்.












