Verupattiruthal - Merkathiya Pothumaivadhathirku Or India Savaal | வேறுபட்டிருத்தல் - மேற்கத்தியப் பொதுமைவாதத்திற்கு ஓர் இந்தியச் சவால்
இந்தியா என்பது ஒரு நாடு என்பதைத் தாண்டி, தனித்துவமான தத்துவங்கள் மற்றும் ஆன்மிகக் கோட்பாடுகள் கொண்ட ஒரு தொன்மையான நாகரிகம். இவை, இன்றைய உலகில் ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய கலாசாரத்தின் சிந்தனை மரப்புகளிலிருந்து பெருமளவில் வேறுபடுகின்றன. இந்திய ஆன்மிக மரபுகள் 'தர்மம்* என்ற அடிப்படைக் கருத்திலிருந்து தோன்றுகின்றன. மேற்கத்திய சிந்தனைச் சூழலில் 'தர்மம்' எனும் கோட்பாட்டைக் கொண்ட கலாசாரம் பின்பற்றப்படவில்லை.
'Being Different: An Indian Challenge to Western Universalism என ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலின் தமிழ்மொழியாக்கமான 'வேறுபட்டிருத்தல்' எனும் இந்த நூலில் சிந்தனையாளரும் தத்துவவியலாளருமான ராஜிவ் மல்ஹோத்ரா, இந்தியக் கோட்பாட்டின் கண்ணோட்டத்தில் மேற்கத்திய உலகிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வேறுபாடுகளை நேர்மையாகவும் ஆழமாகவும் ஆராய்கிறார். இந்தியா ஆய்வு செய்யப்படும் பொருளாக இருந்த நிலையிலிருந்து மாறி, தனது தர்மக் கண்ணோட்டத்திலிருந்து மேற்கத்திய உலகத்தை ஆராய்ந்து இரு தரப்பினரும் தங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கொண்டிருக்கும் பல பரிசோதிக்கப்படாத நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
ஆழமான, சிந்தனையூட்டும் வாதங்கள் நிறைந்த இந்தப் புத்தகம் இந்திய நாகரிகத்தின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் வாசிக்கவேண்டிய முக்கியமான புத்தகமாகும்.
₹576.00 ₹720.00
Customize
Translator
Translator
Sridhar Trichendurai | ஸ்ரீதர் திருச்செந்துறை
Publisher
Swasam Publications
Genre
Philosophy | மெய்யியல்
Number of Pages
Page Count
584
Published on
2026
Language
Tamil
Author
Rajiv Malhotra | ராஜிவ் மல்ஹோத்ரா
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.