சாதவாகன வம்சத்தின் பின்னணியில் அமைந்த வரலாற்று நாவல் இது. மன்னர் முதலாம் சாதகர்ணியின் ஆட்சிக் காலத்தில் நடக்கும் கதை.
பௌத்த மதம் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி ஆட்சியாளர்களின் போர் வன்முறைக்கு எதிராகத் தீவிரமான பிரசாரத்தை மேற்கொள்கிறது. அதே சமயம் கலிங்கத்தின் எதிரிப் படைகளால் சாதவாகனப் பேரரசுக்கு அபாயம் ஏற்படுகிறது. வீரமும் பராக்கிரமும் கொண்ட தளபதியின் துணையுடன் மகாராணி நடத்தும் ராஜதந்திர நிகழ்வுகளும், அகிம்சை மீது ஆழ்ந்த பற்றுகொண்ட பௌத்தத் துறவி ஸ்ரீலேகாவின் போருக்கு எதிரான உறுதியும் ஒன்றுக்கொன்று மோதுகின்றன.
அரசுக்கெதிரான சூழ்ச்சி தகர்க்கப்பட்டதா, மகாராணியின் ராஜதந்திரம் பலித்ததா, ஸ்ரீலேகாவின் உறுதி நிறைவேறியதா, சாதவாகன வம்சம் நிலைத்ததா எனும் பல கேள்விகளுக்கு இந்த நாவல் பதில் அளிக்கிறது.
தெலுங்கு நாவல் உலகில் 'சரித்திர நாவல் சக்ரவர்த்தி' என்று போற்றப்படும் முதிகொண்ட சிவபிரசாத் எழுதிய ‘ஸ்ரீலேகா’ எனும் இந்தப் புதினத்தை ராஜி ரகுநாதன் தேர்ந்த நடையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
₹496.00 ₹620.00
Customize
Translator
Translator
Raji Raghunathan | ராஜி ரகுநாதன்
Publisher
Swasam Publications
Genre
Novels | நாவல்கள்
Language
Tamil
Author
Muthikonda Sivaprasad | முதிகொண்ட சிவபிரசாத்
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.