தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கங்களாகக் கருதப்படுவது ம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட மதுரை சுல்தானிய ஆட்சி. தமிழர்களைப் பெரும் துன்பத்தில் தள்ளிய அந்த ஆட்சியிலிருந்து தமிழகம் எப்படி விடுபட்டது என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு.விஜயநகரப் பேரரசின் இளவலான குமார கம்பண்ணர் தமிழகத்தை மீட்ட அந்த வரலாற்றை சம்ஸ்கிருதத்தில் காவியமாக வடித்தவர்அவரது மனைவியான கங்காதேவி. சுல்தான்கள் ஆட்சியில் தமிழகம் பட்ட துன்பங்களை அவர் விவரிக்கும்போது எப்பேர்ப்பட்ட பேராபத்திலிருந்து தமிழகம் மீண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.இந்தக் காவியத்தையும் அது எழுதப்பட்ட பின்புலத்தையும் புரிந்து உள்வாங்கிக் கொள்வதற்கு அக்காலத்தில் தமிழகம் இருந்த நிலையையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் பற்றிய புரிதல் அவசியமாக உள்ளது. அதன் காரணமாக இந்த நிகழ்வின் வரலாற்றுப் பின்னணியோடு மதுரா விஜயம் என்ற இந்த நூலின் தமிழாக்கத்தைத் தந்திருக்கிறார் எஸ்.கிருஷ்ணன்.தமிழகத்தின் மீது ஏற்பட்ட சுல்தானியப் படையெடுப்புகள்மதுரை சுல்தான்களின் ஆட்சிதமிழகத்தின் வடபகுதியின் ஆட்சி செய்த சம்புவரையர்களின் வரலாறுவிஜயநகரப் பேரரசின் இளவரசராக இருந்த கம்பண்ணர் தமிழகத்தின் மீது படையெடுப்பதற்கான காரணங்கள் என்று பல செய்திகளைக் காவியத்தின் போக்கோடு தொட்டுச் செல்கிறது இந்த நூல்.
₹160.00
Details
Author
S.Krishnan | எஸ்.கிருஷ்ணன்
Publisher
Swasam Publications
Genre
வரலாறு | History
Number of Pages
134
Published On
2024
Edition
1st Edition
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.